/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துார்வாரப்பட்ட சுந்தரராஜன்பட்டி கண்மாய்: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனுக்கு மக்கள் நன்றி துார்வாரப்பட்ட சுந்தரராஜன்பட்டி கண்மாய்: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனுக்கு மக்கள் நன்றி
துார்வாரப்பட்ட சுந்தரராஜன்பட்டி கண்மாய்: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனுக்கு மக்கள் நன்றி
துார்வாரப்பட்ட சுந்தரராஜன்பட்டி கண்மாய்: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனுக்கு மக்கள் நன்றி
துார்வாரப்பட்ட சுந்தரராஜன்பட்டி கண்மாய்: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனுக்கு மக்கள் நன்றி
ADDED : ஜூலை 06, 2024 06:16 AM

மதுரை : மதுரையில் தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷனின் நிர்வாகக் குழு கூட்டம் நிறுவனர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. நிர்வாகி விஜயபாண்டியன் வரவேற்றார். நேதாஜி சுவாமிநாதனின் தந்தை வேலுச்சாமிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அழகர் கார்டன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மகேஷ், செயலாளர் கோபால் ஆகியோர் சுந்தரராஜன்பட்டிகண்மாய் துார்வாரப்பட்டதற்கு நன்றி தெரிவித்து டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகேஷ் பேசியதாவது: எங்கள் பகுதியின் 135 வீடுகளுக்கு நீராதாரமே சுந்தரராஜன்பட்டி கண்மாய் தான். அதில் கருவேல மரங்கள் சூழ்ந்து துார்வாரப்படாமல் இருந்தது. அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை. டாக்டர் ஆர்.லட்சுமிபதியிடம் முறையிட்ட பின் பவுண்டேஷன் சார்பில் துார்வாரப்பட்டது. தற்போது கண்மாயில் மழைநீர் தேங்கியுள்ளது. அவருக்கு நன்றி என்றார்.
கண்மாய் துார்வாரப்பட்டதற்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பவுண்டேஷன் சார்பில் அறநிலையத்துறைக்கு 2019ல் கோரிக்கை விடுக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் அது சம்மந்தமான வழக்கு விசாரிக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு முதற்கட்டமாக 72 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. அதற்கு காரணமான பவுண்டேஷனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக சுந்தரராஜன்பட்டி கண்மாயின் நீர்வரத்து கால்வாய்களை சுத்தப்படுத்துவது, புதுதாமரைப்பட்டி ஊருணியை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இயக்குனர் உச்சி மகாலிங்கம் நன்றி கூறினார். நிர்வாகிகள் ராகவன், அழகு, ஜெகதீஸ்வரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.