Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 34 ஆண்டுக்குபின் கோயில் திருவிழா நடத்த முடிவு

34 ஆண்டுக்குபின் கோயில் திருவிழா நடத்த முடிவு

34 ஆண்டுக்குபின் கோயில் திருவிழா நடத்த முடிவு

34 ஆண்டுக்குபின் கோயில் திருவிழா நடத்த முடிவு

ADDED : ஜூலை 06, 2024 06:15 AM


Google News
பாலமேடு : பாலமேடு அருகே வெ.பெரியகுளத்தில் ஹிந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி கிராம அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது. இக்கோயிலில் 34 ஆண்டுகளாக கோயில் புரவி எடுப்பு விழா நடக்கவில்லை.

கிராமத்தினர் அறநிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரையிடம் விழா நடத்த மனு அளித்ததை தொடர்ந்து தக்கார் நியமனம் செய்து விழா நடத்த உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் சிலர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இணை ஆணையர் உத்தரவுப்படி விழா நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று தக்கார் இளமதி, இன்ஸ்பெக்டர் சாவித்திரி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பூஜாரியாக தவமணி தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 9, 10ல் விழாவுக்கான பிடிமண் எடுத்து வழங்குதல் நிகழ்ச்சி நடத்தவும், பின்னர் புரவி எடுப்பு விழாவுக்கான தேதியை முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us