/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுழைவுதேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி நுழைவுதேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி
நுழைவுதேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி
நுழைவுதேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி
நுழைவுதேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி
ADDED : ஜூலை 09, 2024 08:18 PM
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் எம்.பி.ஏ., உட்பட 13 பி.ஜி., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 16ல் நடந்தது. 1200க்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆனால், இதுவரை தேர்வு முடிவு குறித்த விவரம் பல்கலை இணையதளத்தில் வெளியாகவில்லை.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் “நுழைவுத் தேர்வு முடிவு விவரத்தை பல்கலை இணையதளத்தில் வெளியிட்டு அதில் மாணவர் 'மெரிட் லிஸ்ட், கட்ஆப்' மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டிங் லிஸ்ட்' விவரங்கள் குறிப்பிட வேண்டும். ஆனால் இதுவரை அதுபோன்ற தகவல் இணையதளத்தில் இல்லை. ஆனால், சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. நுழைவு தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்கலை தெளிவுபடுத்த வேண்டும்” என்றனர்.