/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
ADDED : ஜூன் 14, 2024 05:12 AM
மேலுார்: மேலுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்தி இசக்கி, எஸ்.ஐ., பழனியப்பன், நகராட்சி இளநிலை உதவியாளர் ஜோதி, வணிகர் முன்னேற்ற சங்கத்தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் வெங்கடபாலசுப்பிரமணியன், நகை அடகு கடை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ் மற்றும் அனைத்து வியாபாரிகள் பங்கேற்றனர்.
அடையாள அட்டை உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் கடை வைக்கலாம். ஆட்களை அழைத்துச்செல்லும் வாடகை வாகனங்களுக்கு தனி இடம் அமைப்பது, மெயின் ரோடு சென்டர் மீடியனை அகற்றுவது, ஜூலை 1 முதல் பஸ் ஸ்டாண்ட் முதல் செக்கடி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.