ADDED : ஜூன் 12, 2024 06:15 AM
மதுரை : மதுரை மத்திய சிறையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை நிறைவு செய்த கைதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
இச்சிறையில் தண்டனை கைதிகளுக்கு பல்வகை தொழிற் பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறித்த 30 நாட்கள் பயிற்சி 20க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழா மதுரை சிறை டி.ஐ.ஜி., பழனி தலைமையில் நடந்தது. கண்காணிப்பாளர் சதீஷ்குமார், சாஜர் ஹெல்த் எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ஜாஸ்மின், நபார்டு வங்கி மேலாளர் சக்தி பாலன் பங்கேற்று சான்றிதழ் வழங்கினர்.
பயிற்சியில் 32 வகை இனிப்பு, காரங்கள் செய்முறை, மார்க்கெட்டிங் குறித்து விளக்கப்பட்டது. இங்கு தயாராகும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை சிறையில் செயல்படும் சிறை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.