/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மறியல்: 75 பேர் கைது சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மறியல்: 75 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மறியல்: 75 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மறியல்: 75 பேர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மறியல்: 75 பேர் கைது
ADDED : மார் 14, 2025 05:39 AM

மதுரை: மதுரையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
இத்திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு அரசு துறை சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சி.பி.எஸ்., (கான்ட்ரிபியூஷன் பென்ஷன் ஸ்கீம்) ஒழிப்பு இயக்கம் ஏற்படுத்தி போராடி வருகின்றனர்.
நேற்று சி.பி.எஸ்., ஐ ஆய்வு செய்ய அமைத்த மூவர் குழுவை திரும்ப பெற வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநில அளவில் மறியல் போராட்டம் நடந்தது. மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த மறியலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார்.
பொருளாளர் கல்யாணசுந்தரம், பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் மனோகரன், மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்க மாநில இணைச் செயலாளர் அமுதா, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க இணைச் செயலாளர் வளர்மதி, ஐ.சி.டி.சி., ஊழியர் சங்க செயலாளர் மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.