ADDED : ஜூன் 22, 2024 05:29 AM
மதுரை: மதுரை மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் புதுமண்டபம் உள்ளது. அதில் கடைகள் இருந்தன. மண்டபத்தை புனரமைப்பதற்காக குன்னத்துார் சத்திர வணிக வளாகத்திற்கு கடைகள் மாற்றப்பட்டன. மண்டபத்தை புனரமைக்கவில்லை. அப்பணிக்காக ஒருவர் ரூ.2 கோடியே 25 லட்சம் நன்கொடை தர முன்வந்துள்ளார். ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. மண்டபத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு அறநிலைய துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 8க்கு ஒத்திவைத்தது.