/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு
எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு
எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு
எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2024 07:30 AM

மதுரை: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட அக்கட்சியினர் 129 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஜூன் 22ல் தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். போலீசார் கைது செய்ய முயன்றபோது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவர் உட்பட 17 பெண்கள், 112 நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். ராஜா உட்பட 129 பேர் மீது தல்லாகுளம் போலீசார் அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தது, மக்களுக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.