ADDED : ஜூன் 11, 2024 06:44 AM
மதுரை : டைனர்ஜிக் பிசினஸ் சொல்யூஷன் சார்பில் சென்னையில் நடந்த 'கோல்டன் எய்ம் கான்பரன்ஸ்' விழாவில் மதுரையைச் சேர்ந்த 3 டாக்டர்களுக்கு ஆற்றல்சார் விருதுகள் வழங்கப்பட்டன.
வடமலையான் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த், மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரேடியேஷன் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணகுமார், ஆசீர்வாதம் மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெபசிங் ஆகியோர் விருது பெற்றனர்.