/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 06, 2024 06:12 AM
மதுரை : அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக அக்.10 முதல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு தயாராவோர் http://agnipathvayu.cdac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
3.7.2004 முதல் 3.1.2008 க்குள் பிறந்த வராக இருக்க வேண்டும். 12 ம் வகுப்பு அல்லது மூன்றாண்டு பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள் அவசியம். தேர்வு கட்டணம் ரூ.550 மற்றும் ஜி.எஸ்.டி., உண்டு. 8.7.2024 முதல் 28.7.2024 வரை விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/AV/eligibilityCriteria என்ற இணையதளத்தில் அணுகலாம்.
இத்தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது. தேர்வுக்கு தயாராவோர் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மதுரை வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வம் தெரிவித்துள்ளார்.