ADDED : ஜூன் 18, 2024 06:55 AM
சோழவந்தான், : காடுபட்டி போலீசார் தென்கரை மயானம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அங்கு 2020ல் கொலை செய்யப்பட்ட சிட்டு என்ற ஸ்ரீதரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது புகைப்படம், ஆயுதங்களை வைத்து அஞ்சலி செலுத்திய சோழவந்தான் சந்தான பாரதி 24, பாலமுருகன் 23, பாண்டியராஜ் 18, தென்கரை கட்டாரி 23, கார்த்திகுமார் 25, ஆதி கேசவன் 21, சதீஷ்குமார் 19, திருவேடகம் விஜய் 24, பெரியகுளம் அம்மாபட்டி சிவா 24, ஆகியோரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.