/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான் ஓசூரில் 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான்
ஓசூரில் 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான்
ஓசூரில் 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான்
ஓசூரில் 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான்
ADDED : ஜூன் 17, 2024 01:47 AM
ஓசூர்: ஓசூரில், 2,650 பேர் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின மினி மாரத்தான் போட்டி நடந்தது.
ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமையை வலியுறுத்தி, குணம் மருத்துவமனை, ஓசூர் சிப்காட் அரிமா சங்கம், மனித வள மேம்பாட்டு ஓசூர் பிரிவு, இந்திய மருத்துவச்சங்க ஓசூர் கிளை உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், 5 மற்றும் 10 கி.மீ., மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் 5 கி.மீ., நடைபந்தயம் நேற்று காலை நடந்தது. ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில் இருந்து துவங்கிய, மினி மாரத்தான் மற்றும் நடைபந்தயத்தை, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 - 14, 15 - 18, 19 - 35, 35 - 50 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 2,650க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மொத்தம், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவச் சங்க ஓசூர் கிளை தலைவர் டாக்டர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.