Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் பயிலரங்கம்

எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் பயிலரங்கம்

எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் பயிலரங்கம்

எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் பயிலரங்கம்

ADDED : ஜூலை 15, 2024 12:17 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரி கணினி பயன்பாட்டில் துறை சார்பில், வலைத்தளங்கள் உருவாக்கம் பற்-றிய, 2 நாள் பயிலரங்கம் நடந்தது.

கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் சிவராமன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்-துமணி, மாணவர்களிடம் வலைத்தளங்களின் மூலமாக பெறும் வேலைவாய்ப்புகள் பற்றியும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாதுகாப்பு இன்மை பற்றியும் எடுத்துரைத்தார். பெங்களூருவை சேர்ந்த டெக்சானிக் இன்னோவேஷன் நிறுவ-னத்தை சேர்ந்த லோகேஸ்வரி, வலைத்தளங்களிலுள்ள வேறுபா-டுகள் பற்றி விபரமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். சுருதி, ரவி சாஸ்திரி மற்றும் சாணஸ் ஆகிய பயிற்றுனர்கள், வலைதளங்-களில் செயல்முறை பயிற்சியை செய்து காட்டி, மாணவர்களை ஊக்கப்படுத்தினர். உதவி பேராசிரியர் ஷாலினி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us