/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பைக் மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்புபைக் மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த காளிக்கோவில் அருகே ஜவுக்குபள்ளம், இருளர் காலனியை சேர்ந்தவர் லோகேஷ், 21, கூலித்தொழிலாளி. இவர், தன் உறவினர்களான ஏக்கல்நத்தம் சந்திரன், 24, ராசபுத்திரன், 19 ஆகியோருடன் நேற்று முன்தினம் பல்சர் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை ராசபுத்திரன் ஓட்டியுள்ளார்.
இரவு, 9:00 மணியளவில், பசவண்ணகோவில் அருகே, வரட்டனப்பள்ளி சாலையில் சென்றபோது, எதிரே கோவையிலிருந்து குப்பம் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதிச்சென்றது. இதில், பைக்கிலிருந்த மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சந்திரன், ராசபுத்திரன் இருவரும், ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.