/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கோவிலை இடித்து கொலை மிரட்டல் 36 பேர் மீது வன்கொடுமை வழக்கு கோவிலை இடித்து கொலை மிரட்டல் 36 பேர் மீது வன்கொடுமை வழக்கு
கோவிலை இடித்து கொலை மிரட்டல் 36 பேர் மீது வன்கொடுமை வழக்கு
கோவிலை இடித்து கொலை மிரட்டல் 36 பேர் மீது வன்கொடுமை வழக்கு
கோவிலை இடித்து கொலை மிரட்டல் 36 பேர் மீது வன்கொடுமை வழக்கு
ADDED : ஜூன் 22, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த தொட்டபூவத்தியில், அப்பகுதி மக்களின் மூதாதையர்களால், 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான மண்டு மாரியம்மன் கோவில், காட்டேரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உட்பட மேலும், 5 கோவில்கள் உள்ளன. இதில், இருதரப்பினர் கரகங்கள் எடுத்தும் கும்பாபிஷேகம் நடத்தியும் வந்தனர்.
காட்டேரி அம்மன் கோவிலில், ஒரு தரப்பினர் பொங்கல் பண்டிகை மற்றும் ஊர் பண்டிகை நடத்தப்படுவது வழக்கம். இக்கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத உப்புகுட்டை, மிட்டப்பள்ளி, உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர், காட்டேரி அம்மன் கோவிலை கடந்த ஏப்.,7ல், இடித்து தரைமட்டம் ஆக்கினர்.
இதுகுறித்து போலீசார், வருவாய்துறையினர் விசாரித்தபோது, 'நாங்கள் திரவுபதி அம்மன் கோவில் கட்ட வேண்டும் அதற்காக இடித்தோம்' என அதிகாரிகள் முன், கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து தொட்டபூவத்தியை சேர்ந்த திம்மராஜ் மற்றும் கிராமத்தினர், சென்னையிலுள்ள தேசிய பட்டியல் ஜாதியினர் ஆணைய கமிஷனருக்கு புகார் அளித்தனர். அதன்படி நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கு ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி காட்டேரி அம்மன் கோவிலை இடித்த வழக்கில், உப்புகுட்டையை சேர்ந்த, 36 பேர் மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.