/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சியில் அமைச்சர் தகவல் தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சியில் அமைச்சர் தகவல்
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சியில் அமைச்சர் தகவல்
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சியில் அமைச்சர் தகவல்
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சியில் அமைச்சர் தகவல்
ADDED : ஜூன் 22, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, ''தி.மு.க., ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ-.,க்கள் மதியழகன், பிரகாஷ், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன் வரவேற்றார். மாங்கனி கண்காட்சியை துவக்கி வைத்து, 259 பேருக்கு, 2.52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் தாண்டி, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1989, தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 2006ல், விவசாய கடன் தள்ளுபடி, 2021ல், 2.50 லட்சம் விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் என, விவசாயிகளுக்கு திட்டங்களை, தி.மு.க., அரசு வாரி வழங்கியுள்ளது. தற்போது, 'மா' விளைச்சல் இருந்தும் விலை கொடுக்க முடியாத சூழல் உள்ளது. 'மா' பிரச்னைக்கிற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும், முதல்வரிடம் கூறியுள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாங்கனி கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்கள் விவசாயிகள் மற்றும் தாய்லாந்து நாட்டு விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்காய்களை காட்சிப்படுத்தி இருந்தனர். அதன்படி, ஏற்றுமதிக்கு உகந்த ரகங்களான அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, செந்துாரா, இமாம்பசந்த், மல்கோவா, நீலம், மல்லிகா மற்றும் பையூர்- 1, சிந்து, பஞ்சவர்ணம், கெத்தாமர், நீலகோவா, பீத்தர், ஆஸ்டின், ரத்னா, ருமானி, சேலம் பெங்களூரா, பெங்களூரா, மல்லிகா, நாட்டி, வடமாநில ரகங்களான ஸ்வர்ணா, குருக்கன், அர்கா அன்மே, ரசல் உள்ளிட்ட, 167 ரக மாங்காய்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலக்காய், கிராம்பூ, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டாணி, ஜாதிக்காய், அன்னாசி பூ, ஜாதிகொட்டய், மிளகாய் விதைகள், கசகசா உள்ளிட்ட, 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு ஏர்கலப்பையும், பல்வேறு பூக்கள், காய்கறிகள் மூலம் அணில், மயில் உள்ளிட்ட விலங்கு மாதிரிகள், சாமந்தி பூக்களில், 'செல்வி பாயின்ட்' காய்கறிகளில் மாட்டு வண்டி உள்ளிட்டவை அமைத்திருந்தனர். இதன் முன் நின்று, ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.