Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ADDED : ஜூன் 06, 2025 01:11 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த, அஞ்சூர் ராஜன்கொட்டாய் கிராமத்தில், நேற்று விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, தம்பதி சங்கல்பம், வாஸ்து சாந்தி, மாலை, 7:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், விநாயகர் மற்றும் நவகிரஹ பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன.

நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, விநாயகர் மற்றும் நவக்கிரஹ பிரதிஷ்டை நடந்தது. 4:00 மணிக்கு, 2ம் கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நவகிரஹ கண்திறப்பு, மஹா பூர்ணாஹூதி நடந்தது. 5:30 மணிக்கு, கடம் புறப்பாடு, யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு, விநாயகர் மற்றும் நவக்கிரஹகங்களுக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us