/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திறன் மேம்பாட்டு ஆற்றல் ஆய்வு கூட்டம் ஓசூர் சிப்காட்டில் 100 நிறுவனம் பங்கேற்பு திறன் மேம்பாட்டு ஆற்றல் ஆய்வு கூட்டம் ஓசூர் சிப்காட்டில் 100 நிறுவனம் பங்கேற்பு
திறன் மேம்பாட்டு ஆற்றல் ஆய்வு கூட்டம் ஓசூர் சிப்காட்டில் 100 நிறுவனம் பங்கேற்பு
திறன் மேம்பாட்டு ஆற்றல் ஆய்வு கூட்டம் ஓசூர் சிப்காட்டில் 100 நிறுவனம் பங்கேற்பு
திறன் மேம்பாட்டு ஆற்றல் ஆய்வு கூட்டம் ஓசூர் சிப்காட்டில் 100 நிறுவனம் பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2025 01:11 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் தொழில்நுட்ப பூங்கா, ஓசூர் புத்தாக்க மையத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து, திறன் மேம்பாட்டிற்கான ஆற்றல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் விஜயகுமார், முன்னிலை வகித்தார்.
சிப்காட் நிறுவன செயல் இயக்குனர் சினேகா, தலைமை வகித்து பேசியதாவது: சிப்காட் நிறுவனம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய பங்காற்றி வருகிறது. இதுவரை, 24 மாவட்டங்களில், 50 தொழிற்பூங்காக்களை, 48,926.48 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கி உள்ளது. 3,390 தொழில் நிறுவனங்களின் மூலம், 1.99 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதுடன், 8.79 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
உயர்கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை, மாணவர்களிடத்தில் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பயிலும்போதே கண்டறியப்பட்டு, தொழில் நிறுவனங்களின் உதவியுடன் தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, 100 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, திறன்மிகு தொழிலுக்கான பயிற்சியை வடிவமைப்பதற்கு ஏதுவாக, பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்கான ஆற்றல் மற்றும் மதிப்பீடு குறித்து, கருத்துக்களை பகிர்ந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இவ்வாறு, அவர் பேசினார்.
சிப்காட் பொது மேலாளர் சந்திரமோகன், செயல்பாட்டு ஆலோசகர் மெய்யப்பன், சிப்காட் அலுவலக தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சிப்காட் தொழில்நுட்ப பூங்கா, ஓசூர் புத்தாக்க மையத்தின் போர்ட் நிறுவனத்தை சேர்ந்த, பணியாளர்கள் கலந்து கொண்டனர்.