/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ரூ.4,500 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ரூ.4,500 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ரூ.4,500 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ரூ.4,500 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க ரூ.4,500 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
ADDED : ஜூன் 29, 2025 01:20 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 40. விவசாயி. கடந்த, 24ம் தேதி வாரிசு சான்றிதழுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்தார். நேற்று முன்தினம் சாலிவரம் வி.ஏ.ஓ., அலுவலகம் சென்ற அவர், அங்கிருந்த வி.ஏ.ஓ., லட்சுமிகாந்தன், 52, என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க கேட்டுள்ளார். அதற்கு அவர், 6,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரை செய்வதாக கூறியதால், 1,500 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.
மேலும், மீதமுள்ள பணத்தை கொடுத்தால் தான், பரிந்துரை செய்வேன் என வி.ஏ.ஓ., லட்சுமிகாந்தன் கூறினார். மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி ஜெயராமன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 4,500 ரூபாயை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த லட்சுமிகாந்தனிடம் நேற்று ஜெயராமன் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், வி.ஏ.ஓ., லட்சுமிகாந்தனை கைது செய்தனர்.