/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
ADDED : ஜூன் 29, 2025 01:21 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக, 491 டன் விதை இருப்பில் உள்ளது.
இதுபற்றி வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு சாகுபடிக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல் விதை-216 டன், சிறுதானியங்கள் - 64.2 டன், பயறு வகைகள் - 39 டன், எண்ணெய் வித்து - 172.3 டன் என, 491 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்களான யூரியா - 4,331.9 டன், டி.ஏ.பி., - 1,848.9 டன், பொட்டாஷ் - 2,888.6 டன், காம்ப்ளக்ஸ் - 9,021 டன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.