/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மேய்ச்சல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மேய்ச்சல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மேய்ச்சல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மேய்ச்சல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க மேய்ச்சல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 20, 2024 06:09 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை அடுத்த மாதம் ஜூலை, 10 ம் தேதி வரை வனத்துறை நடத்துகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திலுள்ள வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள, 100 க்கும் மேற்பட்ட குக்கிராம மக்களுக்கு தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வனத்துறை மற்றும் இதர துறைகள் செய்து கொடுக்கின்றன. இக்கிராம கால்நடைகளுக்கு சில நேரங்களில் ஆந்த்ராக்ஸ், கோமாரி, அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அச்சமயங்களில் அவற்றை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பும்போது, வன விலங்குகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. மேலும், தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளை மட்டுமே, சரணாலய பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வனத்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து, நாட்றாம்பாளையம், தக்கட்டி, உரிகம், கோட்டையூர், மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்.,க்களுக்கு உட்பட்ட கிராமங்களில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை துவக்கி உள்ளன. அடுத்த மாதம் ஜூலை, 10 வரை தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது என, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டு முத்திரை வைக்கப்படும் கால்நடைகளை மட்டுமே வனப்பகுதிக்குள் அனுமதிக்க முடியும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.