/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதாக தனியார் ஊழியரிடம் ரூ.6.95 லட்சம் மோசடிகூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதாக தனியார் ஊழியரிடம் ரூ.6.95 லட்சம் மோசடி
கூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதாக தனியார் ஊழியரிடம் ரூ.6.95 லட்சம் மோசடி
கூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதாக தனியார் ஊழியரிடம் ரூ.6.95 லட்சம் மோசடி
கூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதாக தனியார் ஊழியரிடம் ரூ.6.95 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 20, 2024 06:09 AM
கிருஷ்ணகிரி: கூரியரில், போதை பொருட்கள் வந்துள்ளதாக, டில்லி சைபர் கிரைம் போலீசார் போல பேசி, ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம், 6.95 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜூஜூவாடியை சேர்ந்தவர் சங்கர், 43, தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த, மே, 10ல், இவருக்கு ஒரு போன் வந்தது. அதில், தாங்கள் டெல்லி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாகவும், உங்களின் பெயரில் ஒரு கூரியர் பார்சல் வந்துள்ளது. அதில் சட்ட விரோதமாக போதை பொருட்கள் இருந்துள்ளது. எனவே உங்கள் மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்.அவ்வாறு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, 7 லட்சம் ரூபாயை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் போட வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 6.95 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். இதன் பிறகு அவருக்கு யாரும் போன் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பார்த்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கர் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.