ADDED : செப் 23, 2025 01:29 AM
ஓசூர், ஓசூரில், 'காலைக்கதிர்' நாளிதழ் ஸ்பான்சருடன் நடந்த பின்னணி பாடகர் உன்னிமேனன் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி யில், ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், 'டி மார்ட்' பின்புறமுள்ள ஏ.டி.எஸ்., மைதானத்தில், ஜெயம் ஈவன்ட் காமராஜ் நடத்திய, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் உன்னிமேனன் பங்கேற்ற, 'ஊலலலா' என்ற இசை திருவிழா இன்னிசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஊடக உதவியை, 'காலைக்கதிர்' நாளிதழ் வழங்கியது.
ஓசூர் மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மீரா மருத்துவமனை நிர்வாகி அம்பிகா பாரி, ஓவம் மருத்துவமனை டாக்டர் விஜய், ஏ.டி.எஸ்., மைதான நிர்வாகி ஆறுமுகம், ஜெயம் ஈவன்ட் காமராஜ், முரளி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
உன்னிமேனன் பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி, ரசிகர்களை ரசிக்க செய்தார். அவருடன் இணைந்து, பிரபல பின்னணி பாடகர்களான சோனியா, ஆதியா, ஸ்ருதி, ஜான்வி மற்றும் ஓசூர் ஜீவராணி, ஜான்சி ஆகியோர், மவுனராகம் இசைகுழுவினருடன் இணைந்து பாடினர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி மொழிகளில், பின்னணி பாடகர்கள் பாடல்களை பாடினர். ஏராளமான ரசிகர்கள் கடைசி வரை இருந்து கேட்டு ரசித்தனர். நிகழ்ச்சிக்கு இடையில் பிரமாண்ட திரையில், ரவி முருகையாவின் தேச பக்தி பாடலான, 'தாய் மண்ணே' பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஏ.வி.ஆர்., ஸ்வர்ன மகால், ஷீர்டி டிரஸ்ட், திருமலா கன்ஸ்ட்ரக்சன், காவேரி, மீரா, லட்சுமி மருத்துவமனைகள், ஜே.பி., டெவலப்பர்ஸ், ஸ்கை பில்டர்ஸ், ஐ.ஓ.சி., ஏ.பெரியதம்பி செட்டியார் நிறுவனம் உட்பட பலரது உதவியால், இசை நிகழ்ச்சி நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது. ஏற்பாடுகளை, ஜெயம் ஈவன்ட் காமராஜ் செய்திருந்தார்.