ADDED : ஜூன் 20, 2024 06:00 AM
ஓசூர் : விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரகுமார், 43.
கூலித்தொழிலாளி; குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை கடந்த, 10ல், பெங்களூரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தந்தை குப்பன், 60, அழைத்து சென்றார். ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே சென்ற வீரகுமார் திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் வீரகுமாரை தேடி வருகின்றனர்.ஓசூர் அருகே, குருபட்டி காமராஜ் நகரை சேர்ந்த தர்னீஷ் மனைவி செல்வி, 22. தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார்; கடந்த, 8 மாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். கணவர் புகாரில், ஓசூரிலுள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றும், கள்ளக்குறிச்சி மாவட்டம், காரச்சேரிவயலை சேர்ந்த சித்திரன், 24, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் செல்வியை தேடி வருகின்றனர்.