/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க.,வினர் தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க.,வினர்
தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க.,வினர்
தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க.,வினர்
தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க.,வினர்
ADDED : மே 31, 2025 06:45 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிப்பட்டி பஞ்., சென்னப்ப நாயக்கனுாரை சேர்ந்த த.வெ.க., கட்சியை சேர்ந்த மாயக்கண்ணன், பூவரசன், சக்தி, ஜெயப்பிரகாஷ், பாபு உள்பட, 30க்கும் மேற்பட்டோர். அந்த கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார்.
ஒன்றிய செயலர்கள் மூன்றம்பட்டி குமரேசன், ரஜினிசெல்வம், எக்கூர் செல்வம், வசந்தரசு, நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் மாலதி நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.