Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தக்காளி விலை ரூ.80: இல்லத்தரசிகள் கவலை

தக்காளி விலை ரூ.80: இல்லத்தரசிகள் கவலை

தக்காளி விலை ரூ.80: இல்லத்தரசிகள் கவலை

தக்காளி விலை ரூ.80: இல்லத்தரசிகள் கவலை

ADDED : ஜூன் 20, 2024 06:08 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது, 1,633 ஹெக்டேரில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டிலிருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் தக்காளி அனுப்பப்படுகிறது. கடந்த மாத இறுதியில் தக்காளி ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது. ஓசூர் உழவர் சந்தையை பொருத்தவரை கடந்த, 2 முதல், தக்காளி விலை உயர துவங்கியது. நேற்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்சம், 70 ரூபாய் என விற்றது. வெளிச்சந்தையில் அதிகபட்சமாக, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம் கோடை மழையும், தற்போது பரவலாகவும் மழை பெய்கிறது. அதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி லோடு வரும். அங்கும் மழையால் குறைந்தளவில் தான் லோடுகள் வருகின்றன. கடந்தாண்டு சாகுபடி பரப்பை விட, 150 ஹெக்டேர் அதிகமாக தான் தாக்காளி சாகுபடி நடந்துள்ளது. ஆனால், மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us