/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கர்நாடகாவிற்கு 5.50 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற மினி லாரி டிரைவர் கைதுகர்நாடகாவிற்கு 5.50 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற மினி லாரி டிரைவர் கைது
கர்நாடகாவிற்கு 5.50 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற மினி லாரி டிரைவர் கைது
கர்நாடகாவிற்கு 5.50 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற மினி லாரி டிரைவர் கைது
கர்நாடகாவிற்கு 5.50 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற மினி லாரி டிரைவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
ஓசூர்: சூளகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற, 5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் சின்னசாமி மற்றும் ஆர்.ஐ., துரைமுருகன் ஆகியோர், சூளகிரி அடுத்த மேலுமலை கிராமம் அருகே, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரியில் இருந்த லோடை திறந்து பார்த்தபோது, முன்பகுதியில் பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து விட்டு உள்ளே பார்த்தபோது, 10 மூட்டைகளில் மொத்தம், 5.50 டன் ரேஷன் அரிசி இருந்தது. லாரி டிரைவரான, ஆந்திர மாநிலம், சித்துார் லெனின் நகரை சேர்ந்த டில்லி, 30, என்பவரிடம் விசாரித்தபோது, கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து, கர்நாடகா மாநிலம், பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனால் டிரைவரை பிடித்து, மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், 5.50 டன் ரேஷன் அரிசியை, கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். டிரைவர் டில்லியை கைது செய்த போலீசார், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.