Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் இன்று முதல் திறன் விழிப்புணர்வு வாரம்

கிருஷ்ணகிரியில் இன்று முதல் திறன் விழிப்புணர்வு வாரம்

கிருஷ்ணகிரியில் இன்று முதல் திறன் விழிப்புணர்வு வாரம்

கிருஷ்ணகிரியில் இன்று முதல் திறன் விழிப்புணர்வு வாரம்

ADDED : ஜூலை 09, 2024 06:08 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தையொட்டி இன்று (9ம் தேதி) முதல் 15 வரை (13, 14ம் தேதிகள் நீங்கலாக) ஆகிய நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மகளிருக்கு, பொறியியல் கல்லுாரி, பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், திறன் பயிற்சி பற்றிய விபரங்களை அறிந்து கொண்டு திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us