/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 27, 2025 01:09 AM
கிருஷ்ணகிரி, மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கட்டட மேஸ்திரிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை சேர்ந்தவர் சந்தானகுமார், 31, கட்டட மேஸ்திரி. கடந்த, 2017ல், 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அவருக்கு மது வாங்கி கொடுத்து, மயக்கமாக இருக்கும்போது, பாலியல் தொந்தரவு செய்து, அதை மொபைலில் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை, கடந்த, 2017, செப்., 28ல் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தானகுமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இவ்வழக்கு கடந்த, 8 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி லதா தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சந்தானகுமாருக்கு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக, 10 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், மாணவியை கடத்தியது, வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக, 3 ஆண்டுகள் சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி
ஆஜராகினார்.