/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கள்ளச்சாராய பலிகளுக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்: முனுசாமிகள்ளச்சாராய பலிகளுக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்: முனுசாமி
கள்ளச்சாராய பலிகளுக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்: முனுசாமி
கள்ளச்சாராய பலிகளுக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்: முனுசாமி
கள்ளச்சாராய பலிகளுக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்: முனுசாமி
ADDED : ஜூன் 25, 2024 02:18 AM
கிருஷ்ணகிரி: ''கள்ளச்சாராய பலிகளுக்கு, தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில், தமிழக அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நேற்று, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி, ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. கடந்தாண்டு செங்கல்பட்டு, மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் இறந்தனர். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், இது போன்ற தவறு இனி நடக்காது என்றார். அது நடந்து ஓராண்டிற்குள் கள்ளக்குறிச்சியில், 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர் என்றால், அப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது என்பதும், அதற்கு, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் துணை போய் உள்ளனர் என்பதும் தெரிகிறது. கள்ளச்சாராய பலிக்கு பின், கலெக்டரை இடமாற்றம் செய்துள்ளனர். எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். ஆனால் இதற்கு மூலகாரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்ற இடத்திற்கு, 300 அடியில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தும், கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில், தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயபிரகாஷ், காவேரிப்பட்டணம் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி மற்றும் அ.தி.மு.க.,வினர், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.