/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்
ADDED : ஜன 01, 2024 11:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டுகளில், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சத்யா தலைமையில் நடந்தது.
கமிஷனர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2, 8, 9, 10, 13, 17, 18, 27, 35, 42, 45 ஆகிய வார்டுகளில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.
5, 6, 7, 12, 23, 31, 32 ஆகிய வார்டுகளில், குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் இணைப்பு பெறாமல் உள்ளவைகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு பெற வேண்டும். மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களை, வார்டு வாரியாக கண்டறிந்து, மின்மோட்டாரை பறிமுதல் செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கண்டறிந்து, அவற்றின் மின் இணைப்புகளை துண்டிக்க, மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக துண்டிக்க வேண்டுமென, முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.