/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/'போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைக்க மாணவர்கள் சபதமேற்க வேண்டும்''போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைக்க மாணவர்கள் சபதமேற்க வேண்டும்'
'போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைக்க மாணவர்கள் சபதமேற்க வேண்டும்'
'போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைக்க மாணவர்கள் சபதமேற்க வேண்டும்'
'போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைக்க மாணவர்கள் சபதமேற்க வேண்டும்'
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி: ''போதை பொருட்களே இல்லாத எதிர்காலம் அமைக்க, மாணவர்கள் சபதமேற்க வேண்டும்,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா பேசினார்.உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆசிரியை குணலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா பேசியதாவது:ஒவ்வொரு குற்றங்களிலும் தவறு செய்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனையால் அவர்களை சார்ந்தவர்கள் மட்டும் பாதிக்கப்படுவர். ஆனால் போதை பொருட்களின் தவறால் ஒரு சமுதாயமே பாதிக்கப்படும். போதை பொருட்களின் தீங்கு குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக போராட வேண்டும். போதை பொருட்கள் இல்லாத சமுதாயம் அமைப்போம் என சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.