/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காட்டுப்பன்றி மீது பைக் மோதல்; தந்தை பலி; மகள் படுகாயம்காட்டுப்பன்றி மீது பைக் மோதல்; தந்தை பலி; மகள் படுகாயம்
காட்டுப்பன்றி மீது பைக் மோதல்; தந்தை பலி; மகள் படுகாயம்
காட்டுப்பன்றி மீது பைக் மோதல்; தந்தை பலி; மகள் படுகாயம்
காட்டுப்பன்றி மீது பைக் மோதல்; தந்தை பலி; மகள் படுகாயம்
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
ஓசூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சரயுகுமார் ஷா, 46.
இவருக்கு, கோமல்குமாரி, 22, பாயல்குமாரி, 12, என இரு மகள்கள். தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டையிலுள்ள தனியார் எஸ்டேட்டில் சரயுகுமார் ஷா குடும்பத்துடன் தங்கி, மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோமல்குமாரி, பெங்களூரு தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் மூன்றாமாண்டும், இளைய மகள் பாயல்குமாரி, மதகொண்டப்பள்ளியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த, 7 அதிகாலை, 5:10 மணிக்கு, தன் இளைய மகள் பாயல்குமாரியை உடன் அழைத்து கொண்டு, பஜாஜ் பல்சர் பைக்கில் அகலக்கோட்டை - தளி சாலையில் சரயுகுமார் ஷா சென்றார்.மாருப்பள்ளி அருகே சென்றபோது, காட்டுப்பன்றி ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. அதன் மீது பைக் மோதியதால், சரயுகுமார் ஷா மற்றும் அவரது மகள் பாயல்குமாரி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரயுகுமார் ஷா, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். பாயல்குமாரிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தளி போலீசார் விசாரிக்கின்றனர்.