/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாமியார் காரியத்திற்கு சென்ற மருமகன் சாலை விபத்தில் பலி மாமியார் காரியத்திற்கு சென்ற மருமகன் சாலை விபத்தில் பலி
மாமியார் காரியத்திற்கு சென்ற மருமகன் சாலை விபத்தில் பலி
மாமியார் காரியத்திற்கு சென்ற மருமகன் சாலை விபத்தில் பலி
மாமியார் காரியத்திற்கு சென்ற மருமகன் சாலை விபத்தில் பலி
ADDED : மே 29, 2025 01:17 AM
தர்மபுரி, ஓசூர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து 53, கூலித்தொழிலாளி. நாமக்கல் அருகே, இவரது மாமியார் கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்தார். அவரது, 22ம் நாள் காரியத்திற்கு பச்சமுத்து கடந்த, 26ல், டி.வி.எஸ்., மொபட்டில், ஓசூரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்றுள்ளார்.
அதிகாலை, 4:45 மணியளவில், தொப்பூர் அடுத்த கட்டமேடு அருகில் தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மொபட் கவிழ்ந்தது. படுகாயமடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையிலிருந்து, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பச்சமுத்து உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.