/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ரூ.72 லட்சத்தில் சோலார் மின்வேலி யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ரூ.72 லட்சத்தில் சோலார் மின்வேலி
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ரூ.72 லட்சத்தில் சோலார் மின்வேலி
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ரூ.72 லட்சத்தில் சோலார் மின்வேலி
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ரூ.72 லட்சத்தில் சோலார் மின்வேலி
ADDED : ஜூன் 13, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, ''யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, மகாராஜகடை காப்புகாட்டை ஒட்டி, 72 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் மின்வேலி அமைக்கப்படும்,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் கடந்த, 9ல், மகாராஜகடை, வேப்பனஹள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், யானைகளை விரட்ட கோரியும், மின்வேலி அமைக்க கோரியும் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் தினேஷ்குமார், 'உங்கள் பகுதிக்கு நான் நேரில் வருகிறேன்' என வாக்குறுதி அளித்தார். அதன்படி நேற்று அங்கு சென்று, கிருஷ்ணகிரி வட்டம், மகாராஜகடை காப்புக்காடு பகுதிக்கு உட்பட்ட பெரியசக்னாவூர் வனப்பகுதியிலுள்ள யானைகளை, காப்புக்காட்டின் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பயிர்களை நாசம் செய்யும், 9 யானைகளை ஆந்திர மாநிலம், சீனிவாசபுரம், வேப்பனஹள்ளி கிழக்கு மற்றும் மேற்கு காப்புக்காடு, பதிமடுகு மற்றும் சானமாவு காப்புக்காட்டு வழியாக, பன்னார்கட்டா வனவிலங்கு சரணாலயத்திற்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானை விரட்டும் பணியில், 30க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். யானைகள் மீண்டும் வராமலிருக்க ஏற்கனவே, 3 கி.மீ., துாரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 9 கி.மீ., துாரத்திற்கு, 72 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் மின்வேலி அல்லது இரும்பு கம்பி வேலி அமைக்க, கருத்துரு அனுப்பி பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, வனச்சரகர் முனியப்பன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.