/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்' அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்'
அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்'
அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்'
அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்'
ADDED : ஜூன் 13, 2025 01:21 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி, வானமங்கலம் பஞ்.,க்கு உட்பட்ட சிந்தல்தொட்டியில் ரட்சை கட்டப்பட்டு ஓராண்டான நிலையில், ரட்சைக்கு முதலாமாண்டு பூஜை நடந்தது. முன்னாள் பஞ்., தலைவர் கிருஷ்ணப்பா தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசியதாவது: முன்னாள் பஞ்., தலைவர் கிருஷ்ணப்பா ஒரு மாதத்திற்கு முன், தி.மு.க.,விலிருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார். பொதுவாக ஆளுங்கட்சியில் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என நினைப்பர். ஆனால் அங்குள்ள மாவட்ட செயலாளர், எதையும் செய்யாததால், இவர், அ.தி.மு.க.,விற்கு வந்துள்ளார். நம்மிடையே இணைந்த பிறகு, அவரும் நம் சகோதரர். அனைவரும் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க., ஆட்சி அமைக்க பாடுபடுவோம். இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், ரவிக்குமார், செல்வம், மாதேஷ், சைலேஷ் கிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.