Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் ; கடந்து செல்லும் மக்கள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் ; கடந்து செல்லும் மக்கள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் ; கடந்து செல்லும் மக்கள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் ; கடந்து செல்லும் மக்கள் அவதி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, காவேரிப்பட்டணம் ஒன்றியம், அரசம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புனித நீராடவும், ஈமச் சடங்குகள் செய்யவும், 500க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி - திருப்பத்துார் சாலையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் சாலையில் கடந்த, 4 நாட்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இங்கு புனித நீராடவும், ஈமச் சடங்குகள் செய்ய வரும் மக்கள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை மிதித்தபடி கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த கழிவுநீரால், நோய் தொற்று ஏற்படும் என்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us