Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மகா முனியப்பன் கோவில் திருவிழா

மகா முனியப்பன் கோவில் திருவிழா

மகா முனியப்பன் கோவில் திருவிழா

மகா முனியப்பன் கோவில் திருவிழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரையிலுள்ள, மகா முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

நேற்று அதிகாலை விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை, பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பம்பை சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் ஆணி செருப்பு அணிந்தும், வேல் எடுத்தும், கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார். ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகா முனியப்பன் கோவில் கொங்கு அறக்கட்டளை மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.கோவில் தர்மகர்த்தா சிவசக்தி சண்முகம், சந்திரன், ராஜி, மகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளை நிர்வாகிகள் திருஞானம், செல்வகுமாரன், கருப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us