/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் நெடுங்கல் தடுப்பணையில் 'செல்பி' ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் நெடுங்கல் தடுப்பணையில் 'செல்பி'
ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் நெடுங்கல் தடுப்பணையில் 'செல்பி'
ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் நெடுங்கல் தடுப்பணையில் 'செல்பி'
ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் நெடுங்கல் தடுப்பணையில் 'செல்பி'
ADDED : மே 22, 2025 01:24 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணை நிரம்பி, அதிலிருந்து வரும் உபரிநீர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைநீரால் கே.ஆர்.பி., அணை நிரம்பிய நிலையில், அதிலிருந்து, 3,559 கன அடி அளவுக்கு
உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்
பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, காவேரிப்பட்டணம் அருகே நெடுங்கல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இது
ஆபத்தான, ஆழமான பகுதி என்பதால், பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
இதை பொருட்படுத்தாமல், ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரத்தை பொருட்படுத்தாமல், ஆபத்தை உணராமல், 5 சிறு வயது குழந்தைகளை வைத்துக்கொண்டு நேற்று துணி துவைத்து கொண்டும், 'செல்பி' எடுத்துக் கொண்டும் ஒரு குடும்பத்தினர் கொண்டாடினர். இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.