/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 3வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 139 மனுக்கள் 3வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 139 மனுக்கள்
3வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 139 மனுக்கள்
3வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 139 மனுக்கள்
3வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 139 மனுக்கள்
ADDED : மே 22, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஆலப்பட்டி உள்வட்டத்திற்கு உட்பட்ட சிக்கபூவத்தி, தண்டேகவுண்டனஹள்ளி, பெல்லம்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி, கொம்பள்ளி, கூளியம், செம்படமுத்துார் பகுதிகளிலுள்ள, 12 கிராமங்களுக்கு நேற்று, 3வது நாளாக ஜமாபந்தி நடந்தது-. இதற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
இதில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 139 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இன்று (வியாழக்கிழமை) குருபரப்பள்ளி உள்வட்டத்திற்கு உட்பட்ட, 24 கிராமங்களுக்கான ஜமாபந்தி
நடக்கிறது.