/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' : ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைதொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' : ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' : ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' : ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' : ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
ADDED : ஜன 31, 2024 03:31 PM
ஓசூர் : ஓசூரில், தொழில் உரிமம் பெறாத, 2 ஓட்டல்கள் உட்பட, 3 கடைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் தொழில் உரிமம் பெற, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த, 2 மாதத்தில் மட்டும் மொத்தம், 6,963 கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் தொழில் உரிமத்திற்கு விண்ணப்பித்த, 1,896 கடைகளில், 1,219க்கு தொழில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்காத கடைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களை மூடி, 'சீல்' வைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகிறது. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நடந்த ஆய்வில், தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய, 8 கடைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, பாகலுார் சாலையிலுள்ள, 2 பிரியாணி ஓட்டல்கள் உட்பட மொத்தம், 3 கடைகளை பூட்டி, 'சீல்' வைத்தனர்.