/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புகையிலை பொருட்கள் விற்பனை ரூ.75,000 அபராதம் விதிப்பு புகையிலை பொருட்கள் விற்பனை ரூ.75,000 அபராதம் விதிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை ரூ.75,000 அபராதம் விதிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை ரூ.75,000 அபராதம் விதிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை ரூ.75,000 அபராதம் விதிப்பு
ADDED : மே 24, 2025 01:20 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் பிரபாகரன், அன்பழகன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் கிரி ஆகியோர் கொண்ட குழுவினர், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓசூர் பாகலுார் ஹட்கோ, ஸ்ரீ நகர், ஆனந்த் நகர், பெரியார் நகர்
பகுதிகளில் உள்ள, 26 கடைகளில் சோதனை செய்தனர். இதில், மூன்று கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
இதனால் கடைகளை மூடிய அதிகாரிகள் குழுவினர், உரிமையாளர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அபராத தொகையை செலுத்திய பின் கடையை திறக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
புகையிலை பொருட்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விற்பனை செய்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் எனவும், உரிமையாளர்களை எச்சரித்தனர்.