/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காவேரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் காவேரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
காவேரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
காவேரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
காவேரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ADDED : மே 24, 2025 01:20 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி அருகே உள்ள பழமையான காவேரியம்மன் கோவில் பூகரகம் மற்றும் தீமிதி திருவிழா இரு நாட்கள் நடந்தன.
தோட்டகிரி, ஆவலப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம பெண்கள், மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். உற்சவ மூர்த்தியை தோளில் சுமந்து, பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்.
தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா உட்பட ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.