போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஜூன் 13, 2025 01:23 AM
நல்லம்பள்ளி, பெற்றோர் எதிர்ப்பால், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி, அதியமான்கோட்டை போலீசில் தஞ்சமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் நவீன், 25. பெயின்ட் அடிக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரும், இவரது எதிர் வீட்டில் பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் கோச்சிங் சென்டரில் படித்து வரும் ஷாலினி, 19, என்பவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு, இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையில், நேற்று இருவரும் வீட்டிற்கு தெரியாமல், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டிலிருந்தும் எதிர்ப்பு அதிகரிக்கும் என்பதால், காதல் ஜோடி அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, சமரசம் பேசி, காதல் ஜோடியை பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.