ADDED : ஜூன் 13, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில், 5 வயது குழந்தை உட்பட, 5 பேர் மாயமாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் அத்திக் பாஷா, 38. இவரது, 5 வயது மகன் உமர். இருவரும் கடந்த, 9ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் அவர் மனைவி புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்தங்கரை அடுத்த கல்லுாரை சேர்ந்தவர் மகரின், 20. ஊத்தங்கரை தனியார் மருத்துவமனை லேப் டெக்னீஷியன். கடந்த, 10ல், மருத்துவமனையில் பணி முடிந்து சென்றவர், வீடு செல்லவில்லை. அப்பெண்ணின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகாரில், கல்லுாரை சேர்ந்த ஜெகதீஷ், 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிங்காரப்பேட்டை அடுத்த படத்தனுாரை சேர்ந்தவர் திருமதி, 27. மகனுார்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனை நர்ஸ். நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து சென்றவர், வீடு சேரவில்லை. அவரின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் அளித்த புகாரில், படத்தனுாரை சேர்ந்த ராகுல், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
சாம்பல்பட்டியை சேர்ந்தவர் சேகர், 68. கடந்த, 9ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவர் மகன் புகார் படி, சாமல்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.