/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சீரான குடிநீர் சப்ளை கேட்டு சாலைமறியல் போராட்டம்சீரான குடிநீர் சப்ளை கேட்டு சாலைமறியல் போராட்டம்
சீரான குடிநீர் சப்ளை கேட்டு சாலைமறியல் போராட்டம்
சீரான குடிநீர் சப்ளை கேட்டு சாலைமறியல் போராட்டம்
சீரான குடிநீர் சப்ளை கேட்டு சாலைமறியல் போராட்டம்
ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
ஓசூர்: ஓசூரில், சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சானசந்திரம் வ.உ.சி., நகர் பகுதி மேடான இடத்தில் அமைந்துள்ளது.
அதனால் இப்பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் தண்ணீர் பிடித்து கொண்ட பின் தான், இப்பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. அப்போது போதிய அழுத்தம் இல்லாததால், வ.உ.சி., நகர் பகுதி மக்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. கடந்த, 6 மாதமாக குடிநீர் பிரச்னை மிகவும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாத காரணத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், ஓசூர் ரிங்ரோட்டில் சீத்தாராம்மேடு நகர்புற சுகாதார நிலையம் அருகே நேற்று மாலை, 4:15 மணிக்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மற்றொரு பைப்லைன் அமைத்து, வ.உ.சி., நகருக்கு போதிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.