/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பணியில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு உதவித்தொகைபணியில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு உதவித்தொகை
பணியில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு உதவித்தொகை
பணியில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு உதவித்தொகை
பணியில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு உதவித்தொகை
ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், அரூர், பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
கடந்த, 2011ல், போலீசில் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு செப்.,ல், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு அபிதா என்கிற மனைவியும் அகிலேஷ், சம்ருத் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த, 2011ல் போலீஸ் பணிக்கு சேர்ந்தவர்கள் மூலம், காக்கி உதவும் கரங்கள் என்கிற குழு மூலம் ஒருங்கிணைந்து, தமிழகம் முழுவதும், 25 லட்சத்து, 49 ஆயிரத்து, 500 ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இத்தொகை நேற்று, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மூலம், பணியின் போது உயிரிழந்த போலீஸ்காரர் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதில், 23 லட்சம் ரூபாய்க்கு குழந்தைகள் பெயரில் எல்.ஐ.சி., பத்திரமாகவும், 2.5 லட்சம் ரூபாய் ராஜேந்திரன் மனைவி பெயரில் காசோலையாகவும் வழங்கப்பட்டது.