/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சமாதானத்திற்கு சென்றவரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு' சமாதானத்திற்கு சென்றவரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
சமாதானத்திற்கு சென்றவரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
சமாதானத்திற்கு சென்றவரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
சமாதானத்திற்கு சென்றவரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 17, 2025 01:41 AM
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளியை சேர்ந்தவர்கள் அருண்குமார், 19, மற்றும் அவரது நண்பர் பிரதீப், 19. இருவரும் டைட்டன் வாட்ச் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். அதே நிறுவனத்தில் ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்த செர்வீன் பிரின்ஸ், 25, மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த, 13ல், நிறுவனத்தில் பணி தொடர்பாக பிரதீப் மற்றும் மேற்பார்வையாளர் செர்வீன் பிரின்ஸ் இடையே வார்த்தை தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த, 14 மாலை, 6:30 மணிக்கு, பிரதீப் மற்றும் செர்வீன் பிரின்ஸ் இடையே சமாதானம் செய்ய, பாகலுார் சாலையில் உள்ள திருப்பதி திருமலா மண்டபம் அருகே அருண்குமார் சென்றார்.
அங்கு தகராறில் அருண்குமாரை பாட்டிலால், செர்வீன் பிரின்ஸ் மற்றும் அவரது நண்பர்களான ஓசூர் தர்கா வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஜோதிமணி, 28, முல்லை வேந்தன் நகரை சேர்ந்த பிரபாகரன், 27, கிரண்குமார் ஆகியோர் தாக்கினர்.
இதில் தலையில் காயமடைந்த அருண்குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, ஜோதிமணி, பிரபாகரன் ஆகியோரை நேற்று முன்தினம் ஹட்கோ போலீசார் கைது செய்தனர். செர்வீன் பிரின்ஸ், கிரண்குமாரை தேடி வருகின்றனர்.