/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லக்கம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் லக்கம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லக்கம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லக்கம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லக்கம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 17, 2025 01:42 AM
ஊத்தங்கரை, 7ஊத்தங்கரை அடுத்த, காட்டேரி பஞ்., லக்கம்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன், விநாயகர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
தொடர்ந்து, 9:30 மணிக்கு மேல் கோவில் கலசத்தின் மீது, புனித தீர்த்தம் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஊர் மணியக்காரர் அறிவழகன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.