/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப கோரி அமைச்சரிடம் மனு பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப கோரி அமைச்சரிடம் மனு
பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப கோரி அமைச்சரிடம் மனு
பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப கோரி அமைச்சரிடம் மனு
பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஜூன் 28, 2025 03:50 AM
ஓசூர்: ஓசூரில் நடந்த நன்றி அறிவிப்பு மாநாட்டில், உருது பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அமைச்சர் மகேஷிடம் மனு வழங்கப்பட்டது.
ஓசூரில், தமிழ்நாடு உருது துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நேற்று மாநாடு
நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் மகேஷிடம், ஆசிரியர்கள் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்-பள்ளி, எகுடதம்பள்ளி ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்-ளியை ஆகியவற்றை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சூளகிரி ஒன்றியம், திருமலைகவுனிகோட்டா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை சுற்றி, 20 கி.மீ., தொலைவில் உயர் கல்வி கற்க எந்த பள்ளிகளும் இல்லை. எனவே இப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.ஓசூர் மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்-பட்ட சிறுபான்மை மாணவ, மாணவியர் படிப்பதால், 9 முதல், பிளஸ் 2 வரை உருது மொழிப்பிரிவை துவங்கி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தளி அரசு உருது உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உருது பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து உருது வழி பள்ளிகளுக்கும், உருது மொழி பாடத்திற்கு, கூடுதலாக ஒரு நோட்டு புத்தகம், கட்டுரை ஏடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.